குனம் என்றால் மூடநம்பிக்கை என நினைத்துவிடாதீர்கள். ஜோதிட சாஸ்திரத்தில் அடங்கிய ஆறு பெரும் பிரிவுகளில் ஒன்று தான் சகுன சாஸ்திரம். இதனை நிமித்தம் எனவும் அழைக்கின்றனர். ஒரு நிகழ்வு நிகழ்வதற்கு முன்பாக அதைத் தெரிவிக்கும் காட்சி அல்லது ஒளி அல்லது அதற்கு முன்பான நிகழ்வே சகுனம் என்னும் நிமித்தமாகும்.

Advertisment

எடுத்துக்காட்டாக, மழை வருவதற்கு முன்பாக வானில் மேகம் கருத்துக் காணப் பட்டால் மழை வருமென உணரலாமன்றோ! இவ்வாறு ஒரு தோற்றம் மற்றும் நிகழ்வால் வரவிருப்பதை உணர்ந்துகொள்வதே சகுனம் என்பதாகும். இந்த சகுன சாஸ்திரத்தை ஜோதிடப் பெருமக்கள் கற்றுக்கொள்வதன் மூலமாக சிறப்பான பலன்களை மிக எளிமை யாகக் கூறமுடியும்.

vv

திருமணத்தைக் கூட்டுவிக்கும் சகுனங் கள் எவையென இங்கே காண்போம்.

பெண் ஒருத்தி நிறைகுடத்தில் தண்ணீர் எடுத்துவரும் வேளை, அந்த குடத்தின்மீது காகம் ஒன்று அமர்ந்திருப்பதைக் காண நேர்ந்தால் செல்வச்சேர்க்கை மற்றும் பெண் ணின் சேர்க்கை ஏற்படுமென கூறவேண்டு மாம். அதாவது நிறைவான வரதட்சணையோடு செல்வந்தர் வீட்டுப் பெண் மணமகளாக வருவாள் என கூறவேண்டுமாம்.

அவ்வாறே புத்தாடையை இயல்பாகக் காணநேர்ந்தாலும் அல்லது சலவைசெய்து மடித்துவைத்த ஆடைகளை இயல் பாகக் காணநேர்ந்தாலும் திருமணம் கைகூடுமென உணரவேண்டும். ஒருவரின் புகழைக் கூறுவதைக் கேட்க நேரிட்டாலும் திருமணம் நடக்குமென உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு ஜோடி புத்தாடைகளைக் காணநேர்ந்தாலும் அல்லது மஞ்சள், சந்தனம் அரைத்து ஒன்றாகக் குழைத்து வைத்திருப் பதைக் காணநேர்ந்தாலும் திருமணம் கை கூடுமென உணரலாம்.

திருமண பிரசன்ன வேளையில் இரு கன்னிப் பெண்கள் அல்லது இரு இளைஞர்கள் ஒன்றாக வருவதைக் காணநேரிட்டாலும் திருமணத்தைக் கூட்டுவிக்கும் சகுனமென உணரலாம்.

அரைத்து வைக்கப்பட்ட களபம் அல்லது விசித்திரமான பட்டுத் துணி, பல வண்ணப் பூக்கள் அல்லது பல வண்ணங்களைக் காணநேர்ந்தாலும் திருமணம் கைகூடும் சகுனமென உணர்ந்துகொள்ளவேண்டும்.

கண்களில் எழுதும் கண் மையைக் காணநேரிட்டாலும் அல்லது கண்ணில் மையெழுதிய பெண் வருவதைக் காண நேர்ந்தாலும் திருமணம் கைகூடுமென கூறவேண்டும்.

திடீரென இருவர் கைகோர்த்துக் கொள்வதைக் காணநேர்வது திருமணத்தைக் கைகூடச் செய்யும் சகுனமாகும்.

இதுபோன்று பிரசன்ன மார்க்க நூலில் கூறப்பட்ட சில நிமித்தங்களை அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். திருமணத் தைக் குறித்து பிரசன்ன பலன் கேட்கும் வேளை அல்லது திருமணப் பேச்சுவார்த்தை நடத்தும்போது, திருமணம் சம்பந்தமான பயணத்தின்போது ஒரு ஆண்மகன் இரண்டு பெண்களோடு வருவதைக் காண நேர்ந்தாலும், ஒரு பசுமாடும் ஒரு காளைமாடும் இணைந்து வருவதைக் காணநேரிட்டாலும், அஷ்டமங்களப் பிரசன்னத்தில் சக்கரம் வரைதல் போன்ற காரியங்களை இருவர் இணைந்து செய்தாலும், அதாவது ஒரு செயலை இருவர் இணைந்து செய்வதைக் காணநேர்ந்தாலும் மீண்டும் திருமணம் நடப்பதற்கான வார்த்தைகளை எவரேனும் கூறினாலும் அல்லது இரண்டு திருமணம் செய்தவரைக் குறித்த தகவலை அந்த வேளையில் கூறினாலும், பேசப்படும் திருமணத்தோடு மீண்டும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்படும் என்று கூறவேண்டும் .இவை யாவும் இயல்பாக நடக்கவேண்டும். ஒருவர் வேண்டுமென்றே நிகழ்த்தும் நிகழ்வாக இருத்தல் கூடாது.

அடுத்ததாக யானை, எருமை ஆகியவற்றின் குரலைக் கேட்க நேரிடுவது, சிவந்த மலர்களைக் காண நேரிடுவது, இரண்டு நபர்கள் கைகோர்த்து பின்பு கையைவிட்டுப் பிரிவதைக் காண்பது, பிணம் அல்லது மரணத்தைக் காண நேர்வது, மரண வார்த்தைகளைக் கேட்பது, கலகம் நிகழ்வதைக் காணநேர்வது, கூக்குரலைக் கேட்கநேரிடுவது என இந்தவகையான சகுனங்கள் யாவும் பேசிய திருமணம் தடைப்படும் நிலையைத் தெரிவிக்கும் அமைப்பாகும்.

மேலும் பிரசன்னப் பலனுரைக்கும் நேரத்தில், பேச்சுவார்த்தை வேளையில் துணி வியாபாரி வருகை புரிந்தாலும் அல்லது இரு விலங்குகள் கூடுவதைக் காணநேரிட்டாலும் விரைவில் திருமணம் கூட்டிவைக்கும் அமைப்பென்பதை உணரவேண்டும்.

திருமணத்தைக் குறித்த பேச்சுவார்த்தை அல்லது திருமணத்தைக் குறித்துப் பிரசன் னம் கேட்கும்போது, கிண்டியைத் தவிர்த்து மற்ற உலோகப் பாத்திரங்களைக் காணநேர்ந்தாலும், தும்பைப்பூ, வெள்ளியால் செய்யப்பட்ட பொருள் களைக் காணநேரிட்டாலும், பூணூல் அணிந்த உத்தம பிராமண இளைஞனைக் காணநேர்வதும், கைகளால் கண்களைத் தொடுவதைக் காண நேர்ந்தாலும் இவை உடனடி மணம் கூட்டும் அமைப்பாகும்.

அதுபோன்று இயல்பாக இரு பொருட்கள் ஒன்றாக இருப்பதைக் காணநேர்வது, பிரிந்த பொருட்கள் ஒன்றாக இணைவதைக் காணநேரிடுவது, தம்பதிகள் எதிரில்வரக் காண்பது, கருப்பு நூல்சரடைக் கைகளிலோ கால்களிலோ அணிந்த நபர்களைக் காணநேர்வது, பாடகரைக் காண்பது, பாடிக் கொண்டு, இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு எவரேனும் வருவதைக் காணநேர்வது, சந்தனம் முதலிய நறுமணப் பொருட்களைக் காண நேர்வதும் திருமணத்தை விரைவில் கூடச் செய்கின்ற சகுனமென நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

செல்: 97913 67954